இலங்கை: மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்கள் அரசாங்கச் செலவில் நல்லடக்கம்

இலங்கை: மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்கள் அரசாங்கச் செலவில் நல்லடக்கம்

1 mins read

மட்டக்களப்பு சியோன் தேவால யத்தில் நேற்று குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டவர் கள் அரசாங்க செலவில் நல்லடக் கம் செய்யப்படுவர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க உயர் அதிகாரி மா. உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த அந்த துயரச் சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாகக் கூறிய உதயகுமார், குண்டு வெடிப்பில் இறந்தவர் களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இணைங்கியிருப் பதுடன் அவர்களின் குடும்பத் திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படயிருப்பதாகவும் கூறி னார். முதற்கட்டமாக 60,000 ரூபாயும் இரண்டாம் கட்டமாக 40,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார். மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பில் 14 குழந்தை கள், 7 பெண்கள் உட்பட மொத் தம் 26 பேர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு நகரையும் தேவாலயங்களையும் பாது காப்பதற்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.