கனடாவில் மூன்று மலையேறிகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

கனடாவில் மூன்று மலையேறிகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

1 mins read
2350fea5-a14f-49ca-981a-dfcde197fd69
-

கனடாவின் மேற்குப் பகுதியிலுள்ள மலைத்தொடரில் பிரபல மலையேறிகள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் ஆஸ்திரியர்கள், ஒருவர் அமெரிக்கர்.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த 35 வயது ஹன்ஸ்ஜோர்க் அவுவர், 28 வயது டேவிட் லாமா ஆகியோருடன் 36 வயது அமெரிக்கர் ஜெஸ் ரொஸ்கெல்லி கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து காணாமல் போனதாக கனடாவின் தேசிய பூங்கா அமைப்பு தெரிவித்தது. அதற்கு அடுத்த நாளே அதிகாரிகள் அந்த மலையேறிகளை வான்வழியாகத் தேட முயன்றனர்.

கனடாவின் 'ராக்கி' மலைகளிலுள்ள மிகவும் ஆபத்தான 'ஹவுஸ்' பாதையின் கிழக்குப் பக்கத்தில் ஏற அந்த மூவரும் முயன்றுகொண்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாக மலையேறிகளுக்கு நிதியாதரவு அளித்த 'த நார்த் ஃபேஸ்' நிறுவனம் கூறியது.