இலங்கையில் மீண்டும் வெடிப்பு

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்திற்கு அருகிலுள்ள வேன் ஒன்றில் திங்கட்கிழமை குண்டு வெடித்தது.

இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை என்றது ‘ஏபி’ செய்தி நிறுவனம்.

290 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் ஓர் அனைத்துலக அமைப்பு செயல்பட்டிருக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.