இந்தோனீசியப் பணிப்பெண் கொலை வழக்கு: மாது விடுவிக்கப்பட்டதால் கோபம்

இந்தோனீசியப் பணிப்பெண் கொலை வழக்கு: மாது விடுவிக்கப்பட்டதால் கோபம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்தோனீசியப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மாது, குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களைக் கோபமடையச் செய்துள்ளது. அம்பிகா என்பவரான அந்த மலேசிய மாது, பணிப்பெண்ணைப் பட்டினிபோட்டு, தமது நாயுடன் வீட்டுக்கு வெளியில் படுக்க வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பணிப்பெண் வீட்டிற்கு வெளியே மோசமான நிலையில் காணப்பட்டார். அவரது உடலிலும் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பணிப்பெண் சில நாட்களில் உயிரிழந்தார்.

அதையடுத்து அம்பிகா மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது. ஆனால் பினாங்கு உயர் நீதிமன்றம் அம்பிகாவைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாக அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கான காரணம் அளிக்கப்படவில்லை. "நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது; ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று மலேசிய மனித உரிமை ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்தனர்.