பிலிப்பீன்சை உலுக்கிய நிலநடுக்கம்; ஐவர் மரணம்

பிலிப்பீன்சை உலுக்கிய நிலநடுக்கம்; ஐவர் மரணம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் மத்திய பகுதியை 6.4 ரிக்டர் அளவி லான வலுவான நிலநடுக்கம் நேற்று உலுக்கியதாக அமெ ரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இரு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் தலைநகர் மணிலாவில் உள்ள சில வர்த் தகக் கட்டடங்கள் ஆட்டங்கண் டன. இதனால் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த ஊழி யர்கள் உடனடியாக கட்ட டத்தைவிட்டு வெளியேறினர். பிலிப்பீன்ஸ் நேரப்படி மாலை 5.11 மணியளவில் மணிலாவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியின் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மதிப்பிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் தொடர்பான படங் களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.