பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்ற ஏர் ஏஷியா விமானத்தில் பயணம் செய்த இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை 5.30 மணி அளவில் பெர்த் நகரில் விமானம் தரையிறங்கியபோது காவல் துறை அதிகாரிகளுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஏர்ஏஷியா பேச்சாளர் ஒருவர் கூறினார். பயணிகளின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என்று அவர் தெரி வித்தார்.
கைக்குழந்தையின் மரணம் தொடர்பில் வேறு எந்தத் தகவ லையும் அந்தப் பேச்சாளர் வெளியிடவில்லை.பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு காலை 6.50 மணிக்குத் திரும்ப வேண்டிய அந்த விமானம் முற்பகல் வரை விமான நிலையத்தில்தான் இருந் தது. ஆஸ்திரேலியக் காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர் பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

