சுடச் சுடச் செய்திகள்

மயிரிழையில் உயிர் தப்பினர்

கொழும்பு: இலங்கையின் நீர் கொழும்பில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பிலிருந்து மயிரிழையில் குடும்பம் ஒன்று உயர் தப்பியது.
ஈஸ்டர் பண்டிகையின்போது செயிண்ட் செபாஸ்டியன் தேவால யத்திற்கு வந்த திரு டிலிப் ஃபெர்ணான்டோ, அங்கு கூட்டம் நிறைந்திருந்ததைக் கண்டு பிரார்த்தனைக்காக வேறொரு தேவாலயத்திற்குச் செல்ல முடிவு எடுத்தார்.

அந்த முடிவு அவரது உயிரைக் காப்பாற்றியது. தேவாலயத்தைவிட்டு அவர் புறப்பட்ட சற்று நேரத்தில் அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந் தது. தேவாலயத்தில் ஏற்பட்ட சேதத்தைக் காண தமது குடும்பத்துடன் திரு டிலிப் நேற்று காலை அங்கு வந்தார்.

“பொதுவாக பிரார்த்தனைக்காக நான் இங்குதான் வருவேன். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு நானும் எனது மனை\வியும் செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்திற்கு வந்தபோது அங்கு கூட்டம் நிறைந்து காணப் பட்டதால் அமர்வதற்குக்கூட இட \மில்லை. எனவே வேறொரு தேவா லயத்திற்குச் சென்று விட்டோம்,” என்று திரு டிலிப், 66, கூறினார்.

எனினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் எழுவர் தேவால யத்திற்கு வெளியே அமர முடிவு எடுத்தனர். அப்போதுதான் தற் கொலைப்படை தாக்குதல்காரன் என சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவன் தேவாலயத்திற்கு உள்ளே செல்வதை அவர்கள் கண்டனர்.

“பிரார்த்தனை முடிவடையும் தருணத்தில் 30 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர் கனமான பையுடன் உள்ளே செல்வதை அவர்கள் கவனித்தனர்,” என்று ஏஎஃப்பி செய்தியாளரிடம் திரு டிலிப் கூறினார்.
அந்த ஆடவர் தேவாலயத் திற்குள் நுழைந்த சற்று நேரத்தில் மோசமான குண்டுவெடிப்பு நிகழ்ந் தது.

“அதிர்ந்துபோன எனது குடும்பத்தார் உயிருக்குப் பயந்து சம்பவ இடத்தைவிட்டு தப்பி ஓடினர். தாக்குதலுக்கு இலக்கான தேவாலயத்திற்குள்  நான் இருக்கி றேனா என்பதை விசாரிக்க என்னை அழைத்தனர். ஆனால் வேறொரு தேவாலயத்தில் நான் இருந்தேன்,” என்று திரு டிலிப் நினைவுகூர்ந்தார்.

தமது குடும்பத்தில் யாரும் இத்தாக்குதலில் உயிரிழக்கா விடிலும், ஒட்டுமொத்த சமூகமும் இந்த அசம்பாவிதத்தில் சீர் குலைந்து போய்விட்டதாக அவர் கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தக் கொடூரத் தாக்குதலில் தமது மூன்று பிள்ளைகளைப் பறி கொடுத்தார் டென்மார்க்கின் ஆகப் பெரிய பணக்காரரான ஆண்டர்ஸ் ஹோல்ச் போல்சன். நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை யான அவர்,

விடுமுறையைக் கழிக்க தமது குடும்பத்துடன் சேர்ந்து இலங்கைக்கு சென்றதாக அவரது பேச்சாளர் ஒருவர் குறிப் பிட்டார்.

ஸ்காட்லாந்திலேயே போல்சன் தான் ஆகப் பெரிய நில உரிமை யாளர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது. நாட்டின் ஒரு விழுக்காட்டுக்கும் அதிகமான நிலத்திற்கு அவர் சொந்தக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகை கூறுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon