இந்நிலையில், இலங்கையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து பயங்கரவாதக் குழுக்கள் மேலும் பல தாக்குதல்களை அரங்கேற்ற திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"எச்சரிக்கை எதையும் விடுக் காமல் பயங்கரவாதிகள் தாக்கக் கூடும்," என்று அமைச்சு வெளி யிட்ட பயண அறிவுரையில் அது குறிப்பிட்டது.
சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், கடைத்தொகுதிகள், ஹோட்டல் கள், வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று அமைச்சு கூறியது.
இலங்கையில் நிலைமை மேம் படும் வரை அந்நாட்டுக்குச் செல் வதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்காவுடன் சேர்ந்து கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் குடிமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளன.

