'தெளஹீத் ஜமாத்' மீது குற்றச்சாட்டு

'தெளஹீத் ஜமாத்' மீது குற்றச்சாட்டு

1 mins read
60923906-f1c9-4f5b-8f9f-8b9705c9282e
-

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக 'நேஷனல் தெளஹீத் ஜமாத்' என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் 'தெளஹீத் ஜமாத்' அமைப்பு இதுவரையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 9.7 விழுக்காட்டினர். ஆயினும், அவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் கலவரம் ஒன்று மூண்டதை அடுத்து கேகாலையிலுள்ள புத்தர் சிலைகளை 'தெளஹீத் ஜமாத்' அமைப்பினர் சேதப்படுத்தியதாக ஏஎஃப்பி கூறியது. இம்மாத முற்பகுதியில் இலங்கையின் போலிஸ் தலைவரால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஆவணம் ஒன்றைத் தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதிவேற்றம் செய்தார்.

'தெளஹீத் ஜமாத்' அமைப்பு மற்ற பல தேவாலயங்களிலும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.'தெளஹீத் ஜமாத்'தை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் ஆதரிக்கின்றனவா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வளவு கடுமையான தாக்குதலை இந்த அமைப்பு தனியாகச் செய்திருக்க முடியாது என்பது அவர்களின் கருத்து. "உள்ளூர் பயங்கரவாதிகளின் பின்னணியில் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதாகப் புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்," என்று இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.