பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்; உயர்ந்தது மாண்டோர் எண்ணிக்கை

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்; உயர்ந்தது மாண்டோர் எண்ணிக்கை

1 mins read
be92a087-15a4-40b0-b785-2b1af132044f
-

பிலிப்பீன்ஸின் மத்திய பகுதியை உலுக்கி எடுத்த 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11க்கு உயர்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் இடிந்த இரண்டு கட்டடங்களில் சிக்கிப் புதையுண்ட பலரை அதிகாரிகள் தொடர்ந்து மீட்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

பிலிப்பீன்ஸ் நேரப்படி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மணிலாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

பம்பாங்சா மாவட்டத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. உயிரிழந்தோர் அனைவரும் அங்கு வசித்தவர்கள் என்று பிலிப்பீன்ஸ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்ந்து விழும் கட்டடச் சிதைவுகளால் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.