ரயில் தடத்தின்மீது விழுந்த ஆடவர் பலி

ரயில் தடத்தின்மீது விழுந்த ஆடவர் பலி

1 mins read
dddd16c1-f254-4a6b-93c7-088ede79222b
-

ஹாங்காங்கின் எம்டிஆர் ரயில் நிலையத்தில் ரயில் தடத்தின்மீது விழுந்த ஆடவர் மாண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு 'டை வை' ரயில் நிலையத் தளமேடையிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதி செய்யப்பட்டது.

ஓடுகிற ரயிலுக்கு முன் அந்த ஆடவர் குதித்ததுபோல் கண்காணிப்புக் கேமராக்கள் காட்டுகின்றன.

சம்பவம் நடந்த நாளன்று 'ஷா டின்' நிலையத்திற்கும் 'லோ வூ' நிலையத்திற்கும் இடையிலான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.