சுடச் சுடச் செய்திகள்

இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

இலங்கையில் 321 உயிர்களைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சென்ற ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடந்த அந்தத் தொடர் குண்டுவெடிப்பு தாக்கு தலில் 500க்கும் அதிகமானோர் காய மடைந்தனர்.

“இலங்கையிலுள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி உறுப் பினர்களையும் கிறிஸ்துவர்களை யும் குறிவைத்து ஐஎஸ் போராளி கள் இந்தத் தாக்குதலை நடத்தி னர்,” என்று அந்த அமைப்புக் கூறியது. எனினும் தனது கூற்றுத் தொடர் பான ஆதாரங்களை அது வெளியிடவில்லை.

மார்ச் 15ஆம் தேதி 50 பேர் மரணமடைந்த கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பதிலடியாக இலங் கையில் வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தாக இலங்கையின் தற்காப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே முன்னதாகக் கூறியிருந்தார்.

தாக்குதல் தொடர்பான விசார ணையில்  இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலிஸ் உதவி வருவதாகவும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் எனப்படும் மற்றொரு தீவிரவாத அமைப்பின் மீது கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், “உள்ளூர் பயங் கரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பின்னால் அனைத்துலக அமைப்புகள் இருப்பதாக உளவுத் துறை அறிக்கைகள் கூறுயிருப் பதால், விசாரணையில் அனைத் துலக உதவி நாடப்பட்டுள்ளது,” என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஒரு கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார். 

இலங்கையின் பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் அனுபவம் வாய்ந்த உயர் தொழில்நுட்பம்,  புலனாய்வு திறன்களைக்கொண்ட எட்டு நாடுகள் உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக கூறிய சிறிசேன, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என் றும் அவர் சொன்னார்.

கிறிஸ்துவர்கள், வெளிநாட்டி னரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏழு தற்கொலைத் தாக்குதல்காரர்கள் நடத்தியுள்ளதாக உளவுத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தாக் குதல் நடைபெறுவதற்கு முன்னரே அந்த அறிக்கையை மற்ற நாடு களின் அரசாங்கங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon