இலங்கை: விரிசலால் ஏற்பட்ட விளைவு

இலங்கை: விரிசலால் ஏற்பட்ட விளைவு

2 mins read
09a2bd93-af12-4c66-a8f4-fdb2a3c64a51
தாக்குதலில் தமது அன்புக்குரியவர்களை இழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் கதறி அழும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: இலங்கையில் நடை பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வுக்கும் இடையே நிலவும் உறவு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தாக்குதல் நிகழப் போவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அர சாங்கம் மெத்தனமாக இருந்து விட்டது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தாக்குதல்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரணில், தாக்குதல் குறித்து ஏற் கெனவே புலனாய்வுத் தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அதைத் தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக் கோ யாரும் சுட்டிக்காட்டவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்திய புலனாய்வுத் தகவல் களை ரணில் குறிப்பிட்டாரா அல்லது வேறேதும் எச்சரிக்கை வந்ததைக் குறிப்பிட்டாரா என்று தெளிவாகத் தெரியவில்லை.

பாதுகாப்புத் துறை தற்போது அதிபர் சிறிசேனவின் கட்டுப் பாட்டில் இருப்பதால், புலனாய்வு கடிதத்தை ரணில் மற்றும் அவரது அமைச்சர்கள் ரகசியமாக வைத்து இருந்ததாக மற்றொரு குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை பிரச் சினைகளைத் தீர்க்க, வெளி நாடுகளின் உதவியை எதிர்பார்க்க தேவையில்லை என அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நேற்று கூடியது. இதில் பேசிய ராஜபக்சே, இலங்கையின் பிரச்சி னைகளை அந்நாட்டினரே தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தேசியப் பாதுகாப்பில் தற்போ தைய அரசு கவனம் செலுத்த வில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். அதிபர் பதவியில் இருந்து தான் விலகியபோது இலங்கையில் பயங்கரவாதம் என்பது முற்றிலும் இல்லை என்றும் ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் விசா ரணைக்காக சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்.

காவல்துறையின் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். சந்தேகத்துக் குரியவர்களைத் தேடும் பணியின் போது அவர் கைதானார் என்று கூறப்படுகிறது. இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஐஃபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. எப்போதும் நள்ளிரவில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஐஃபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது.