நாகசாக்கி: புகைபிடிக்கும் பழக்க முடைய பேராசிரியர்கள் அல்லது ஆசிரியர்களைத் தான் பணியில் அமர்த்தப்போவதில்லை என்று ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், ஆசிரியர் பதவியில் சேர்ந்த பிறகு புகை பழக்கத்தைக் கைவிடுவதாக விண்ணப்பதா ரர்கள் வாக்குறுதி தந்தால் அவர் களுக்கு விதிவிலக்கு அளிக்கப் படும் என்று நாகசாக்கி பல்கலைக் கழக அதிகாரிகள் கூறினர்.
இம்மாதம் 19ஆம் தேதி நடப் புக்கு வந்த இந்தப் புதிய கொள்கை, ஜப்பானில் அனைத்து பொது இடங்களிலும் புகைபிடிப் பதைத் தடை செய்ய முன்னெடுக் கப்படும் முயற்சிகளில் ஒரு பகுதி யாக அமைகிறது.
"பல்கலைக்கழகமாக எங்க ளது பணி மனிதவளங்களைப் பேணி வளர்ப்பதே. புகைபிடிக்கும் பழக்கத்தை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு இருக் கிறது," என்று நாகாசாக்கி பல்க லைக்கழகத் தலைவர் ஷிகேரு கோனோ கூறினார்.
இதுபோன்ற ஒரு கொள் கையைத் தன்னாட்சி பல்கலைக் கழகம் ஒன்று நடைமுறைப் படுத்தியதை இதுவரை தான் கேள்விப்பட்டதில்லை என்று அந்நாட்டின் சுகாதார, தொழிலாளர் அமைச்சு அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டார்.
நாகசாக்கி பல்கலைக்கழக வளாகத்தில் புகைபிடிப்பதற்கான தடை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடப்புக்கு வரு கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சிகரெட்டுகள் அல்லது தீ மூட்டிகளைக் கொண்டுசெல்ல ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படாது. அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களில் தற்போது எட்டு விழுக் காட்டினர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

