பிலிப்பீன்சை நேற்று மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்

பிலிப்பீன்சை நேற்று மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read
73212348-3680-4d04-aff2-40a3980dabc0
போராக் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பேரங்காடி. படம்: கென் டேலா குரூஸ்/ஃபேஸ்புக் -

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளும் கட்டடங்களும் ஆட்டங் கண்டன. நிலநடுக்கம் 6.4 ரிக்டர் எனும் அளவில் பதிவானது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகவில்லை.

பிலிப்பீன்சில் நேற்று முன்தினம் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பத்பன்கா மாகாணத்தில் பல நகரங்கள் அதிர்ந்தன. வீடு கள் மற்றும் கட்டடங்கள் குலுங் கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தில் போராக், லுபாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. இங்கு அடுக்குமாடி வீடுகள், காங்கிரீட் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

போராக் நகரில் நான்கு மாடி களைக் கொண்ட ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கித் தவித்த பலர் மீட்கப்பட்டனர். அந்நாட்டில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயங்களும் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.