மியன்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 பேர் உயிரிழப்பு

மியன்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 பேர் உயிரிழப்பு

1 mins read
daaa37be-a69d-4ad6-9704-d5371520a9c0
-

யங்கூன்: மியன்மாரில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நேற்று ஏற் பட்ட நிலச்சரிவில் ஏறக்குறைய 50 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்க சில சுரங்கங்கள் பயன் பட்டு வருகின்றன.

அவற்றில் ஒரு சுரங்கத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தின் ஆழமான பகுதியில் 55 தொழிலாளர்கள் இருந்தபோது ஏற்பட்ட இந்த நிலச் சரிவில் யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. எனவே, இந்தச் சம்பவத்தில் சுமார் 50 பேர் இறந்து இருக்கலாம் என அந்நாட்டு ஊட கங்கள் கூறின.