வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ரஷ்யாவை அடைந்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உச்சநிலை சந்திப்பைத் திரு கிம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அமெரிக்காவுடனான அணுவாயுதக் களைவு குறித்த பேச்சுவார்த்தைகள் இழுபறி அடைந்திருக்கும் நிலையில் ரஷ்யாவுடன் மேலும் அணுக்கமாக இருக்க வடகொரியா முற்படுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சீன அதிபர் சீ சின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோருடனான சந்திப்புகளுக்குப் பிறகு, திரு கிம் மூன்றாவது முறையாக மற்றொரு நாட்டுத் தலைவரைச் சந்திக்கிறார்.
கவசங்கள் பொருந்திய ரயில் வழியாக ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் கஸான் என்ற ஊரைத் திரு கிம் புதன்கிழமை (ஏப்ரல் 24) அடைந்தார். ரஷ்யாவின் அந்தப் பகுதிக்குரிய பாரம்பரியமான முறையில் திரு கிம்முக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

