கறுப்பினத்தவரைக் கொன்ற வெள்ளைக்கார வெறியன்

இனவாதப் பகைமையின் காரணமாக கறுப்பின ஆடவர் ஒருவரைக் கொடூரமாகக் கொன்ற வெள்ளைக்கார ஆடவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 1998ஆம் ஆண்டில் திரு ஜேம்ஸ் பையர்ட்டைக் கொன்ற மூன்று ஆடவர்களில் ஒருவரான 44 வயது ஜான் வில்லியம் கிங்கிற்கு விஷ ஊசி வழியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றது நீதிமன்றம். 

வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த திரு பையர்ட்டை வழியில் கண்ட அந்த மூன்று வெள்ளைக்கார ஆடவர்கள், அவரை இடைமறித்து பலவந்தமாக இழுத்துச் சென்றனர். அவர்கள் திரு பையர்ட்டை அடித்து அவரை லாரிக்குப் பின்னால் சங்கிலியால் பிணைத்தனர். பின்னர், அவர்கள் அந்த லாரியை சுமார் 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றனர். லாரியால் தரதரவென இழுக்கப்பட்ட திரு பையர்ட்டின் தலை, வழியில் இருந்த சாக்கடைக் குழாயில் சிக்கி அறுபட்டது.  

கொலை செய்த மற்ற இரண்டு ஆடவர்களில் ஒருவரான லாரன்ஸ் புரூவருக்கு 2011ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷான் பெர்ரி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon