இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: நிதானமாக சென்ற தாக்குதல்காரன்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய வர்களில் ஒருவன் நிதானமாக நடந்து தேவாலயத்திற்குள் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

வெளிர் நீல சட்டை அணிந்த அவன் தாக்குதல் நடந்த நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்திற்குள் நுழையும்போது ஒரு சிறுமியின் தலையிலும் தோளிலும் செல்ல மாகத் தட்டிவிட்டு நடக்கிறான். முதுகில் பெரிய பையுடன் பிரார்த் தனை மண்டபத்துக்குள் சென்ற அவன் குண்டை வெடிக்கச் செய்தார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் வெடிகுண்டு தாக் குதலில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 359க்கு உயர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் 60 பேர் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுவதாக போலிஸ் பேச்சாளர் கூறினார்.

தாக்குதல் குறித்து புலனாய்வு பிரிவுக்குத் தகவல்கள் கிடைத்தும் அது மறைக்கப்பட்டுள்ளது என இலங்கை நாடாளுமன்ற நாயகரும் அமைச்சருமான லட்சுமன் கிரியெல்ல சொன்னார்.

"அரசாங்கத்தைத் தாண்டிய ஒரு சக்தி புலனாய்வுத் துறையை இயக்குகிறது.

"தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி இந்தியா வில் உளவுத் துறை இலங்கைக்கு வலியுறுத்தியும்கூட பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்துள் ளது," என்று அவர் சாடினார்.

இந்திய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப் பின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தியா, இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தது என சிஎன்என் செய்தி தெரிவித்துள்ளது.

சந்தேக நபர், தான் இலங் கையில் ஜஹ்ரான் ஹாசிம் என் பவருக்குப் பயிற்சியளித்ததாகவும் அவர் தவுஹீத் ஜமாத் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த வன் என்றும் கூறினார்.

எனினும் ஐஎஸ் சந்தேக நபர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்து இந்திய அதிகாரி எதனையும் தெரிவிக்கவில்லை என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, தாக்குதல்களு டன் இரு இஸ்லாமிய குழுக் களுக்குத் தொடர்புள்ளதாகவும் பாதுகாப்புக் கருதி மேல் விவரங் களை வெளியிட முடியாது என்றும் இலங்கையின் தற்காப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறினார்.

"ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்தவனே மற்ற இடங்களிலும் தாக்குதல் களை மேற்கொண்ட குழுக்களின் தலைவன்.

"வசதி படைத்தவனான அவன் லண்டனில் பட்டக்கல்வியும் ஆஸ்திரேலியாவில் பட்டயக் கல்வியும் படித்தவன்," என்ற அவர், விசா ரணை தொடர்வதாகக் கூறினார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர்களின் சடலங்கள் அடை யாளங்காணப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் பெண் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019-04-25 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!