27 ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட பெண்

27 ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட பெண்

2 mins read
3f0be81d-5739-411a-96d6-44a5a7e98fbf
ஐக்கிய அரபு சிற்றரசின் திருவாட்டி முனிரா அப்துல்லா,Pix source: Khushnum -

விபத்தில் மகனைக் காப்பாற்ற முயன்ற தாயார், அதில் ஏற்பட்ட கடுமையான மூளைப் பாதிப்பில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். 27 ஆண்டுகளாக மருத்துவமனை யில் இருந்த அவர் சென்ற ஆண்டுதான் கண்விழித்தார்.

ஐக்கிய அரபு சிற்றரசில் திருவாட்டி முனிரா அப்துல்லா, தம் நான்கு வயது மகனுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது, ஒரு பள்ளிப் பேருந்துடன் அவர்கள் இருந்த கார் மோதியது.

அப்போது 32 வயதாக இருந்த திருவாட்டி முனிரா மகனைக் காப்பாற்றுவதற்காக அவரைக் கட்டி அணைத்துக்கொண்டார். ஆனால் விபத்தின் தாக்கத்திற்கு அவர் ஆளானதில் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென் றார்.

அவர் கண்விழிக்கவே மாட் டார் என மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.

இருப்பினும் தாயார் நிச்சயம் ஒருநாள் கண்விழிப்பார் என்ற நம்பிக்கை இருந்ததாக தற்போது 32 வயதுடைய அவரின் மகன் ஒமார் வெப்பேர் 'த நேஷனல்' நாளிதழிடம் தெரிவித்தார்.

லண்டனிலுள்ள ஒரு மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட திரு வாட்டி முனிரா, அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத கோமா நிலையில் இருந்தார். ஆனால் அவரால் வலியை உணர முடிகிறது என் பதை முகபாவங்களைக்கொண்டு அவரின் மகன் கண்டுபிடித்தார்.

திருவாட்டி முனிராவின் தசை கள் சீர்கெடுவதைத் தவிர்க்க சில ஆண்டுகள் அவருக்கு உடற் தசை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காப்புறுதித் திட்டத்தின் கட்டுப்பாடுகளால் நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு அவர் மாற்றப்பட்டு வந்தார். 2017ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள மருத் துவமனைக்கு மாற்றப்பட்ட திரு வாட்டி முனிரா, அங்கு சிகிச்சை பெற்று வந்த இறுதி வாரத்தில் கண்விழித்தார்.

கண்விழித்த தாயார் உச் சரித்த முதல் சொல் அவருடைய மகனின் பெயரைத்தான்.

தற்போது அபுதாபியில் சிகிச் சையும் மறுவாழ்வுப் பயிற்சியும் பெற்று வருகிறார் திருவாட்டி முனிரா.

நம் அன்பிற்குரியவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை ஒரு போதும் இழக்கக்கூடாது என்பதை இச்சம்பவத்தின் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார் மகன் ஒமார்.