விரல்கள் இன்றி தேசிய கையெழுத்துப் போட்டியில் வென்ற 10 வயது சிறுமி

விரல்கள் இன்றி தேசிய கையெழுத்துப் போட்டியில் வென்ற 10 வயது சிறுமி

1 mins read

மேரிலாந்து: அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த சாரா ஹின்ஸ்லி என்ற 10 வயதுச் சிறுமியின் இரு கைகளிலும் விரல்கள் இல்லை. ஆங்கிலம், மாண்டரின் ஆகிய மொழிகளில் எழுதும் திறன்கொண்ட அந்தச் சிறுமி, அமெரிக்காவில் நடந்த தேசிய கையெழுத்துப் போட்டியில் கலந்து கொண்டு பரிசை வென்றுள்ளார். பிறவியிலேயே தனது விரல்கள் இன்றி பிறந்த இந்தச் சிறுமி, வகுப்பில் நட்சத்திரமாகத் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டுகிறார் இவரது மூன்றாம் வகுப்பு ஆசிரியர் செரில் சுரில்லா. வகுப்பில் எந்த வேலை கொடுத்தாலும் என்னால் முடியாது என்று சாரா கூறியதே இல்லை என்கிறார் அந்த ஆசிரியர்.