காத்மாண்டு: நேப்பாளத்தில் நேற்று காலை 6.29 மணிக்கு 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் 12 நிமிடங்கள் கழித்து மீண்டும் 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திலும் அண்டை நாடான திபேத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நிலையம் தெரிவித்தது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 9,000 பேர் பலியாயினர். 22,000க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இப்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

