அமெரிக்காவுக்குள் சட்ட விரோதக் குடியேறிகள்: இந்தியருக்கு சிறை

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதக் குடியேறிகள்: இந்தியருக்கு சிறை

1 mins read

வா‌ஷிங்டன்: சட்ட விரோதக் குடியேறிகளை நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வந்ததற்காக இந்தியர் ஒருவருக்கு அமெரிக்காவில் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யட்விந்தர் சிங் சந்து என்ற அந்த 61 வயது ஆடவர், சட்ட­விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற கிட்டத்தட்ட 400 பேருக்கு உதவியிருக்கிறார். 2013லிருந்து 2015 வரை அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டார். அந்தச் சட்ட விரோதக் குடியேறிகளில் பெரும்­பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மிகவும் ஆபத்தான முறையில் படகுகள் மூலம் அந்தக் குடியேறிகளை அமெரிக்காவுக்குள் கடத்திக்கொண்டு வந்தார் என்றும் அவ்வாறு கடத்தி வரப்பட்டவர்களில் ஒருவர் மாண்டார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 2013ஆம் ஆண்டு முதல் ஹைட்டி, டோமினிக்கன் குடியரசு, போர்ட்டோ ரிக்கோ, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அவர் சட்ட விரோதக் குடியேறிகளை அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வந்தார் எனவும் கூறப்படுகிறது.