கொழும்புக்கு அருகில் வெடிப்பு - யாரும் காயமடையவில்லை

கொழும்புக்கு அருகில் வெடிப்பு - யாரும் காயமடையவில்லை

1 mins read
b1383906-53c2-4da3-8d9c-18ee3ca5a902
-

இலங்கை தலைநகர் கொழும்புக்குக் கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள புகோடா நகரில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக போலிசாரும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

புகோடா நகர நீதிமன்றத்திற்குப் பின்னால் இருக்கும் வெற்று நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று அவர் கூறினார். அதிகாரிகள் இதனை மேற்கொண்டு விசாரிப்பர் என்றும் அவர் சொன்னார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற திட்டமிடப்பட்ட வெடிப்புகள் இது இல்லை என்றார் திரு குணசேகர.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்களில் 359 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் இலங்கையில் கடும் பதற்றம் நிலவுகிறது.