வலு­வான உறவுக்கு கிம்-புட்­டின் உறுதி

வலு­வான உறவுக்கு கிம்-புட்­டின் உறுதி

2 mins read
316b8a0e-c684-4bb7-8707-7e574d3534a0
-

விளாடி­வோஸ்டோக்: வடகொரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன்­னும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டி­னும் தங்­க­ளுடைய முதல் சந்திப்­பில் வலு­வான இரு தரப்பு உறவுக்கு உறுதி தெரிவித்­துள்­ளனர்.

விளாடி­வோஸ்டாக்­கில் உள்ள ஃபார் ஈஸ்டர்ன் மத்திய பல்கலைக்­ கழ­கத்துக்கு முன்பு லிமோ­சின் காரிலிருந்து புன்னகையு­டன் இறங்கிய திரு கிம், அங்கே தமக்­ காகக்­ காத்­திருந்த புட்டினை ஆவ லுடன் நோக்­கி­னார்.

இரு­வரும் கைகுலுக்­கிக்­ கொண்ட­னர். சில வார்த்தை­­களை அவர்கள் பரிமாறிக்­ கொண்ட­னர். பின்­னர் தங்­க­ளு­டன் வந்­து­ள்ள பேராளர்­களை ஒரு­வருக்கு ஒரு­வர் அறிமு­கம் செய்து வைத்­தனர்.

உல­கின் கவனம் கொரிய தீப கற்­பத்­தின் மீது படிந்­து­ள்ள சமயத்­ தில் இந்தச்­ சந்திப்பு ஆக்ககர­மான விளைவு­களை ஏற்­படுத்­தும் என்று திரு கிம்மிடம் புட்­டின் நம்பிக்கை தெரிவித்­தார்.

"கருத்­து­களைப்­ பகிர்ந்து கொள்­வோம். தீபகற்­பத்­தின் சூழ் நிலையை விரிவாக ஆராய்­வோம்," என்­றார் அவர்.

ரஸ்கி தீவில் நடைபெ­றும் இந்தச்­ சந்திப்­பில் நாட்­டின் பொரு ளியலை வெகுவாகப்­ பாதித்துள்ள தமது நாட்டுக்கு எதி­ரான அனைத்­ துல­கத் தடை­களைப்­ பற்றி­ புட்டி னிடம் வடகொரி­யத் தலை­வர் கிம் விவாதிப்­பார் என்று எதிர்­பார்­க்­கப் படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்­பு­டன் நின்றுபோன அணு வாயுதக்­ களைவு பேச்­சு­வார்த்தை­­யும் கிம்முக்கு கவலையை ஏற்­படுத்தி யிருக்­கிறது.

அதே சமயத்­தில் பாதுகாப்பு விவகாரங்­க­ளில் அமெரிக்கா, சீனாவுக்­குப்­ பிறகு ரஷ்யா­வும் முக்­கிய பங்காற்ற இந்தச்­ சந்திப்பு வாய்ப்பளிக்­கும் என்று கூறப்­படு கிறது.

இதை­யடுத்து அணுவாயுத விவகாரங்­க­ளில் ரஷ்யா, ஜப்­பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, வடகொரியா ஆகிய ஆறு நாடு களை உள்ளடக்­கிய பேச்­சு­வார்த்­ தைக்கு மீண்­டும் திரும்ப ரஷ்யா வலியுறுத்­தும் என்­றும் நம்பப்­படு கிறது.

ஓராண்டுக்கு முன்பு வடகொரி­யத் தலை­வருக்கு ரஷ்யா அழைப்பு விடுத்­தது.

ஆனால் அமெரிக்காவுட­னான 2வது உச்சநிலை சந்திப்பு தோல்வி அடைந்த பிறகே கிம் அந்த அழைப்பை ஏற்று ரஷ்யா வந்­துள் ­ளார்.