விளாடிவோஸ்டோக்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தங்களுடைய முதல் சந்திப்பில் வலுவான இரு தரப்பு உறவுக்கு உறுதி தெரிவித்துள்ளனர்.
விளாடிவோஸ்டாக்கில் உள்ள ஃபார் ஈஸ்டர்ன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு முன்பு லிமோசின் காரிலிருந்து புன்னகையுடன் இறங்கிய திரு கிம், அங்கே தமக் காகக் காத்திருந்த புட்டினை ஆவ லுடன் நோக்கினார்.
இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். சில வார்த்தைகளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். பின்னர் தங்களுடன் வந்துள்ள பேராளர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.
உலகின் கவனம் கொரிய தீப கற்பத்தின் மீது படிந்துள்ள சமயத் தில் இந்தச் சந்திப்பு ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திரு கிம்மிடம் புட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.
"கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். தீபகற்பத்தின் சூழ் நிலையை விரிவாக ஆராய்வோம்," என்றார் அவர்.
ரஸ்கி தீவில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் நாட்டின் பொரு ளியலை வெகுவாகப் பாதித்துள்ள தமது நாட்டுக்கு எதிரான அனைத் துலகத் தடைகளைப் பற்றி புட்டி னிடம் வடகொரியத் தலைவர் கிம் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நின்றுபோன அணு வாயுதக் களைவு பேச்சுவார்த்தையும் கிம்முக்கு கவலையை ஏற்படுத்தி யிருக்கிறது.
அதே சமயத்தில் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு ரஷ்யாவும் முக்கிய பங்காற்ற இந்தச் சந்திப்பு வாய்ப்பளிக்கும் என்று கூறப்படு கிறது.
இதையடுத்து அணுவாயுத விவகாரங்களில் ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, வடகொரியா ஆகிய ஆறு நாடு களை உள்ளடக்கிய பேச்சுவார்த் தைக்கு மீண்டும் திரும்ப ரஷ்யா வலியுறுத்தும் என்றும் நம்பப்படு கிறது.
ஓராண்டுக்கு முன்பு வடகொரியத் தலைவருக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது.
ஆனால் அமெரிக்காவுடனான 2வது உச்சநிலை சந்திப்பு தோல்வி அடைந்த பிறகே கிம் அந்த அழைப்பை ஏற்று ரஷ்யா வந்துள் ளார்.

