ஜோகூர் பாரு: ஜோகூரின் சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசா யனக் கழிவுகள் கொட்டப்பட்ட சதித் திட்டத்தில் உடந்தை யாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப் பூரரான டயர் மறுபயனீடு தொழிற்சாலையின் இயக்குநர் சிம் வெய் டெர், 49, நேற்று நீதிமன்றத்தில் தாம் குற்ற வாளி அல்ல என்று கூறி யுள்ளார்.
சிங்கப்பூரரான மற்றொரு இயக்குநர் வாங் ஜின் சாவோ, மலேசியர்களான லாரி ஓட்டுநர் என். மரிய தாஸ், யாப் யோக் லியாங் ஆகிய மூவருடன் சேர்ந்து சட்டவிரோதமாக ஆற்றில் ரசாயனக் கழிவுகளைக் கொட்ட சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் மே 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. கடந்த மாதம் பாசிர் கூடாங் ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்ட தால் 3,500 பேர் பாதிக்கப்பட்டு பள்ளிகளும் மூடப்பட்டன.

