பெய்ஜிங்: பல நாடுகள் வழியாக செல்லும் சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதை திட்டத்தை விளக்கும் கருத் தரங்கு நேற்று பெய்ஜிங்கில் தொடங்கியது. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வர்த்தக இணைப்புப் பாதையின் முக்கிய நோக்கமாகும். நிதியுதவியுடன் ரயில்கள், சாலைகள், துறைமுகங்கள் போன்ற வசதிகள் வர்த்தக இணைப்புப் பாதை செல்லும் நாடுகளில் ஏற்படுத்தப்படும்.
ஆனால் கடனில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சில நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பெய்ஜிங்கில் நடைபெறும் மூன்று நாள் உச்சநிலை மாநாட்டில் 37 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே ஆகியோரும் அடங்குவர்.

