அமெரிக்கா­வில் தட்டம்மை சம்பவங்கள் அதிகரிப்­பு

அமெரிக்கா­வில் தட்டம்மை சம்பவங்கள் அதிகரிப்­பு

1 mins read

நியூ­யார்க்: அமெரிக்கா­வில் இவ் வாண்­டில் இது­வரை 695 தட் டம்மை சம்பவங்கள் பதிவாகியி ருப்பது உறுதி செய்யப்பட்டுள்­ளது.

கடந்த 2000ஆம் ஆண்­டில் தட்டம்மைக்­குக்­ காரண­மான வைரஸ் முற்றிலுமாக ஒழி­க்­கப்பட்டு விட்டதாக அறிவி­க்­கப்பட்ட பிறகு அமெரிக்கா­வில் முதல் முறையாக ஆக அதிக அள­வில் தட்டம்மைச்­ சம்பவங்கள் பதிவாகியுள்­ளன.

கடந்த ஆண்டு பிற்பகுதி­யில் வா‌ஷிங்­டன், நியூ­யார்க்­ வட்டாரங் க­ளில் தட்டம்மை சம்பவங்கள் நிகழ்ந்­து­ள்­ளன.

இதை­யடுத்து தொற்றுநோ­யான தட்டம்மை மற்ற பகுதி­க­ளுக்­கும் பரவியுள்­ளது.

"தட்டம்மை பரவல் தொடர்ந்து நீடித்­தால் அமெரிக்கா­வில் மீண் டும் அந்நோய் கால் ஊன்­றத் தொடங்கிவி­டும்," என்று நோய்த்­ தடுப்பு நிலையங்­க­ளுக்­கான முகவை வெளியிட்ட அறிக்கை எச்சரித்­தது. கடந்த 2000ஆம் ஆண்­டில் இந்நோய் முற்றி­லும் ஒழி­க்­கப்பட்டா­லும் இனி­யும் ஏற் படாது என்று அர்த்தமாகாது.

தட்டம்மை உள்ள நாடுகளி லிருந்து பயணம் செய்­யும் பயணிகள் வழியாக தட்டம்மை பரவக்கூடிய வாய்ப்பு உள்­ளது என்று அறிக்கை குறிப்­பிட்டது.

கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து நியூ­யார்க்­கில் மட்­டும் ஆக அதிகமாக 390 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்­ளன என்று அதிகாரிகள் தெரிவித்­ துள்­ளனர். இதில் புருக்ளி­னில் வசிக்­கும் யூத சமூ­கத்­தின் குழந்தைகளிடையே தட்டம்மை நோய் பரவலாகக்­ காணப்­படுகிறது.

அரிசோனா, கலிஃபோர்னியா, கொலராடோ, ஃபுளோரிடா, டெக்­ சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்சி உட் பட 22 மாநிலங்­க­ளில் இவ்­வாண்டு தட்டம்மை சம்பவங்கள் பதிவாகி யுள்­ளன.