சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள 'மெக்டோனல்ட்ஸ்' உணவகத்தில் ஒரு பெண் தனது மகளுக்காகப் பொரித்த கோழித் துண்டுகளை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அந்தக் கோழித் துண்டுகளில் ஒன்றைக் கடித்த சிறுமி, அதற்குள் சிறகுகள் இருந்ததைக் கண்டார்.
சமைக்கப்பட்ட கோழித் துண்டுக்குள்ளிருந்து சிறகுகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது மிகவும் அருவருப்பாக இருந்ததாக அந்தச் சிறுமியின் தாயார் கூறினார். சிறுமி மூன்று கோழி இறக்கைகளைச் சாப்பிட்ட பிறகுதான் இதனைக் கண்டார்.
சிறுமிக்கு உடல் அளவில் உபாதைகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் மேற்கொண்டு அவளால் சாப்பிட முடியவில்லை....
சிறுமியின் தாயார் 'மெக்டோனல்ட்ஸ்' உணவகத்திற்குச் சென்று நடந்தது பற்றி தெரிவித்தார். இழப்பீடு கொடுக்க உணவகம் முன்வந்தபோதும் அதனை வாங்க அந்தப் பெண் மறுத்துள்ளார். சம்பவத்தைப் பற்றி அவர் அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

