மாஸ்கோ: அமெரிக்கா கெட்ட நோக்கத்துடன் செயல்படுவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் குற்றம் சாட்டியுள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அது அமெரிக்காவைப் பொறுத்தே உள்ளது என்றும் திரு கிம் கூறியுள்ளார். ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய அதிபர் புட்டினை வியாழக்கிழமை திரு கிம் சந்தித்துப் பேசியபோது அமெரிக்காவை குறை கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
கொரிய தீபகற்ப நிலவரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் நிலவரம் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாகவும் திரு கிம், ரஷ்ய அதிபரிடம் கூறினார். அண்மையில் வியட் னாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசியபோது அமெரிக்காவின் தன்னிச்சையான அணுகுமுறை கொரிய தீபகற்ப நிலவரம் பழைய நிலைக்கு திரும்ப வழிவகுக்கும் என்று கிம் எச்சரித்தார். வியட்னாமில் டிரம்ப்- கிம் சந்திப்பு உடன்பாடு எதுவும் காணப்படாமலேயே முடிந்தது.

