ஜோஹனஸ்பர்க்: மொசாம்பிக்கில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் பல வீடுகள் நாசமானதாக அதிகாரிகள் கூறினர். சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில் சுமார் 90 விழுக்காடு வீடுகள் முற்றிலும் நாசமானதாகவும் அவற்றில் பெரும்பாலான வீடுகள் மண் வீடுகள் என்றும் அந்த அதிகாரி கூறினார். மொசாம்பிக்கில் இரண்டாவது முறையாக சூறாவளிக் காற்று வீசுகிறது. கடந்த மார்ச் மாதம் அங்கு பலத்த சூறாவளிக் காற்று வீசியபோது பலர் பாதிக்கப்பட்டனர்.
மொசாம்பிக்: சூறாவளியில் வீடுகள் நாசம்
1 mins read

