நஜிப்­ குற்றச்சாட்டு­களை திருத்­தியமைக்க அல்லது ரத்து செய்ய கோரிக்கை உ­யர் நீதி­மன்றம் தீர்­மானிக்­கும்

நஜிப்­ குற்றச்சாட்டு­களை திருத்­தியமைக்க அல்லது ரத்து செய்ய கோரிக்கை உ­யர் நீதி­மன்றம் தீர்­மானிக்­கும்

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்­ ரசாக்­ மீதான ஊழல் வழக்­கில் அவர் மீது சாட்டப்­ பட்டுள்ள குற்றச்சாட்டு­க­ளில் எந்த ஒரு குற்றச்சாட்டை திருத்தி அமைப்பது அல்லது ரத்து செய்வது என்பது குறித்து உயர் நீதி­மன்றம் வரும் திங்கட்கிழமை தீர்­மானிக்க உள்­ளது.

வழக்கு விசாரணை­யில் இரு தரப்­பும் அவர்க­ளின் இறுதி வாதத்தை முடித்­துக்­கொண்ட பிறகு நீதிபதி முகம்மது மஸ்­லான் தனது முடிவை அறிவிப்­பார் என்று நீதி­மன்­றத் தகவல் கூறியது.

திரு நஜிப்­ மீது சாட்டப்பட்டுள்ள நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு கள் தெளிவாக இல்லை என்­றும் அந்தக்­ குற்றச்சாட்டு­க­ளில் குறிப்­பிட்ட விவரங்கள் இல்லை என்­றும் நஜிப்­பின் வழக்கறிஞ­ரான முன்னாள் அரசாங்க தலைமைச்­ சட்ட அதிகாரி முகம்மது யூசோப்­ ஜைனல் அபி­டின் நீதி­மன்­றத்­தில் வாதிட்­டார். இதனால் அந்த குற்றச்சாட்டு­க­ளில் திருத்தம் செய்யப்பட வேண்­டும் என்று அவர் கேட்டுக்­கொண்­டார்.

நஜிப்­ மீதான குற்றசாட்டு­க­ளில் ஐந்து வித­மான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் எவை என்பதை அரசாங்­கத் தரப்பு குறிப்­பி­டத் தவறி­ விட்டதாக­வும் வழக்கறிஞர் ஜைனல் அபி­டின் கூறி­னார்.

திரு நஜிப்­ மீதான ஊழல் குற்றச்சாட்டு­க­ளும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு­க­ளும் ஒரே சமயத்­தில் விசாரணை செய்யப்பட முடியாது என்று நஜிப்­பின் மற்றொரு வழக்கறிஞ­ரான கமருல் ஹிசாம் கமரு­தின் வாதிட்­டார்.

இந்நிலை­யில் அரசாங்­கத் தரப்பு வழக்கறிஞர் வி.சிதம்பரம், நஜிப்­ மீது சாட்டப்பட்டுள்ள நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் தெள்­ளத்தெளிவாக இருப்பதாகப்­ பதில் அளித்­தார்.

பல்வேறு குற்றங்­க­ளுக்கு பலவித­மான குறிப்­பிட்ட சட்டங் களை நாடாளு­மன்றம் உருவாக்கி யிருப்பதாகக்­ கூறிய திரு சிதம்பரம், ஒவ்­வ­ொரு சட்­டத்­தின் கீழ் குற்றச்சாட்டுகள் கொண்டு வருவது நியாய­மானதே என்று கூறி­னார். இருப்­பி­னும் நீதிபதி முகம்மது மஸ்­லான், நஜிப்­ மீதான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தாமத­மின்றி­ தொடங்கப்பட வேண்­டும் என்று உத்தரவிட்­டார்.