ஜோஹனஸ்பர்க்: சூறாவளி காற்று வியாழக்கிழமை இரவு தாக் கியதில் மொசாம்பிக்கில் கட்டடங் கள் தரைமட்டமாகியதுடன் மக் களிடையே இருந்து வந்த அனைத்து தொடர்புகள் துண்டிக் கவும் பட்டன. இதையடுத்து கன மழை தொடர்ந்து பெய்து வரு வதால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென் றடைய நிவாரணக் குழுக்கள் இன்னமும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் சூறாவளி யால் ஏற்பட்ட சேதங்களை மதிப் பிட முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில் இபோ தீவில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் முற்றிலும் அழிந்தன. அத்துடன் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் நம்பப்படுகிறது.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட சூறாவளியிலிருந்து மீண்டு வரும் மொசாம்பிக்கை மறுபடியும் இன்னொரு சூறாவளி தாக்கிச் சிதைத்துள்ளது.
இதன் தொடர்பில் கிட்டத்தட்ட 30,000 பேர் பாதுகாப்பான இடங் களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

