தட்டம்மை எதிராகத் தடுப்பூசி போட டிரம்ப் அறிவுறுத்து

தட்டம்மை எதிராகத் தடுப்பூசி போட டிரம்ப் அறிவுறுத்து

1 mins read

வா‌ஷிங்டன்: தட்டம்மை நோய்க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அதிபர் டிரம்ப் அமெரிக்கர்களிடையே வலியுறுத் திக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தட்டம்மைச் சம்பவங்கள் அதிகரித்து வரு வதால், பிள்ளைகளுக்குத் தடுப் பூசி போடுமாறு பெற்றோர்களுக்குத் திரு டிரம்ப் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் தடுப்பூசி போட் டுக்கொள்வதால் 'ஆட்டிசம்' எனப்படும் மனவளர்ச்சிக் குறை பாடு ஏற்படுவதாக அவர் இதற்கு முன் கூறியிருந்தார்.

இப்போது அவர் விடுத்துள்ள அறைகூவல் முந்தைய கூற்றுக் குப் புறம்பாக அமைந்துள்ளது.

இதற்கிடையே இரு கலிஃபோர்னிய பல்கலைக்கழகங் களில் உள்ள 700க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் நேற்று முன்தினம் தனிமைப் படுத்தப்பட்டனர்.

இவர்களில் தட்டம்மை ஏற் படக்கூடிய அபாயம் உள்ளோர் யார் யார் என்பதை அடையாளம் காண பல்கலைக்கழகங்கள் சுகா தார அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன.

தட்டம்மை தொற்றியிருந்த ஒரு பல்கலைக்கழக மாணவர் இரு கட்டடங்களில் மூன்று நாட் கள் நடைபெற்ற வகுப்புகளுக்குச் சென்றிருந்தார்.

இவ்வாறு ஒரு தட்டம்மைச் சம்பவம் அதிவிரைவில் பன்மடங் காகிவிடும் என்றும் அறிகுறிகள் ஏற்படுவதற்குமுன் பல வாரங் களாக தட்டம்மைக்கான கிருமி உடலில் இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2000ஆம் ஆண்டில் தட்டம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அந்நோய் தலைவிரித்தாடத் தொடங்கியுள் ளது.

அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 695 தட்டம்மைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆக அண்மையத் தகவல்கள் கூறுகின்றன.