டாக்கா: இடிந்து விழுந்த கட் டடத்திலிருந்து பலரை மீட்டுக் காப்பாற்றிய பங்ளாதேஷ் ஆடவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மன அழுத்தத்திலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
2013ஆம் ஆண்டு ரானா பிளாசா தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் 1,138 பேர் உயிரிழந்தனர். இது உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்து களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியிருந் தோரை திரு நவ்ஷட் ஹசான் ஹிமு, 27, மீட்க உதவினார். சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் தாக்கத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான திரு ஹிமு, புதன்கிழமை அன்று தம் உடல்மீது எண் ணெய்யை ஊற்றி நெருப்பூட்டிக் கொண்டார்.
டாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவர் மாண்டார் என்று போலிசார் கூறினர்.
திரு ஹிமு ஆறு ஆண்டு களுக்கு முன் ஏற்பட்ட சம்பவத் தால் மனநிலை பெரிதும் பாதிக் கப்பட்டு தவித்து வந்ததை அவரின் நண்பர்கள் உறுதிப்படுத் தினர்.
இரு நாய்களுடன் மட்டுமே வசித்து வந்த திரு ஹிமு, மனிதர் களுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்பட்டது.
கட்டடம் இடிந்து விழுந்தபோது கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு விடாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்ற உதவினார் திரு ஹிமு. இவர் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் பலர் தங்களின் அஞ்சலியைச் செலுத்தினர்.
மீட்புப்பணியோடு நிறுத்திக் கொள்ளாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்தவர்களுள் ஒருவர் மாண்டபோது, திரு ஹிமு இறந்தவர் உடலுடன் வீடுவரை சென்றிருக்கிறார்.
அத்துடன் தம்மால் இன்னமும் அழுகிய உடல்களின் துர்நாற் றத்தை உணர முடிவதாகவும் தம் பின்னால் இறந்த உடல்கள் நட மாடுவது போன்று இருப்பதாகவும் நண்பர்களிடம் திரு ஹிமு கூறி இருந்தாராம்.

