‘நாங்கள் தரவு பாதுகாப்பை முக்கியமாக கருதுகிறோம்’  

கோலாலம்பூர்: மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் இணையத்தளத்தில் போதுமான பாதுகாப்பின்மையால் பல வெளி நாட்டு வாகனமோட்டிகளின் தனி நபர் விவரங்களைக் காணமுடிந் ததாக நேற்று முன்தினம் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகன நுழைவு அனு மதிக்கான இணையத்தளத்தில் இருந்த பாதுகாப்புக் குறைபாடு சரிசெய்யப்பட்டுவிட்டதாக நேற்று மலேசிய போக்குவரத்து அமைச்சு கூறியது.

இதன் தொடர்பில் தரவு பாது காப்பை மிகக் கடுமையாகக் கண் காணித்து வருவதாகவும் அதை முக்கியமாகக் கருதுவதாகவும் அமைச்சு கூறியது.

இணையத்தள முகவரியில் ஒரு சிறிய மாற்றம் செய்வதனால் ஓட்டுநரின் அடையாள அட்டை எண், முகவரி, தொடர்பு எண்கள், கடப்பிதழ் விவரங்கள், வாகன இயந்திரத்தின் அடையாள எண் போன்ற விவரங்களைக் காண முடிந்தது. 

இத்தகைய முக்கிய விவரங் களை எவ்வாறு அனைவரும் பார்க் கக்கூடிய வகையில் இணையத் தளம் அனுமதித்தது என்பது குறித்து அமைச்சு எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

இணையத்தளத்தில் இருந்த பாதுகாப்புக் குறைபாடு திரு ஹஃபிஸ் என்ற ஒரு சிங்கப்பூர் வாகனமோட்டியால் கண்டுபிடிக்கப் பட்டது.

தம் உறவினர் வாகன நுழைவு அனுமதிக்காக பதிவு செய்ய உதவுவதற்காக திரு ஹஃபிஸ் இணையத்தளத்தின் முகவரியை அனுப்பியிருந்தார்.

ஆனால் அம்முகவரியில் திரு ஹஃபிசின் தனிநபர் தரவுகள் அனைத்தையும் அந்த உறவினரால் பார்க்க முடிந்ததாகக் கூறப்பட்டது.

இதை அறிந்த திரு ஹஃபிஸ், 28, உடனே தம் வாகன நுழைவு அனுமதி விவரங்களைக் காட்டும் இணையத்தள முகவரியில் சில மாற்றங்களைச் செய்து பார்த்ததில் மற்ற வாகனமோட்டிகளின் முக் கிய தகவல்களைக் காண முடிந் தது.

இதன் தொடர்பில் இத்தரவு களை வெளியாட்கள் பார்த்திருக் கக்கூடும் என்று நிபுணர்கள் கூறினர்.

இணையத்தளத்தில் இருந்த பாதுகாப்புக் குறைபாடு குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மலேசிய அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து நேற்று முன்தினம் மாலை ஐந்து மணியளவில் இணையத் தளத்தைப் பயன்படுத்துவதற்கான  அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட நேரத்தில் இணையத்தளம் மேம்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இதற் கிடையே பயனீட்டாளர்களுக்கு ஓர் அறிவிப்பு காண்பிக்கப்பட்டது.

தீவிர புலனாய்வுக்குப் பின் தளத்தைப் பயன்படுத்தலாம் என்று நேற்று கூறிய அமைச்சு, பிரச் சினையைக் களைய எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டன என் பதைக் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே அக்டோபர் ஒன்று முதல் வாகன நுழைவு அனுமதி நடப்புக்கு வருவதாகவும் அனைத்து வெளிநாட்டு வாகன மோட்டிகளும் தங்கள் வாகனங் களில் இதற்கான அடையாளக் குறியைப் பொருத்துவதற்கான ஏற் பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு நினைவுறுத்தியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon