வாஷிங்டன்: ஒஹையோவில் இரண்டு குழந்தைகளோடு காரைக் கடத்த முயற்சி செய்த இந்திய நாட்டவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் நடந்த சம்பவத்தில் அட்ரியம் மருத்துவமனையில் காரை நிறுத்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட தமது மகளை 69 வயது நீட்டா கோபர்ன் அழைத்துச் சென்றார். அப்போது காரின் பின்பக்கத்தில் கோபர்னின் பேரப் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.
அங்கு வந்த நபர் ஒருவர் காரில் ஏறி குழந்தைகளை கடத்த முயற்சி செய்தார். ஆனால் பத்து வயது சிறுவனும் அவனது எட்டு வயது சகோத ரியும் காரிலிருந்து குதித்து தப்பிவிட்டனர். கண் காணிப்புக் கேமராவில் சம்பவத்தைப் பார்த்த போலிசார் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர். விசாரணையில் 24 வயது சந்தேக நபர் இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் சிங் என்பது தெரிய வந்தது. இவர் ஒரு போதைப் புழங்கி என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

