கொழும்பு: இலங்கையில் உள்ள தேவாலயங்களிலும் ஹோட்டல் களிலும் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் அந் நாட்டு ஹோட்டல்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் காலத்திய 'மவுண்ட் லாவினியா' ஹோட்டலின் தலைவர் சனத் உக் வாடே, ஈஸ்டர் நாளன்று நடத்தப் பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஹோட்டல் அறைகளுக்கான பதிவு 30 விழுக்காடு குறைந்து விட்டது என்றார்.
பயங்கரவாதத் தாக்குதல்களில் ஏறக்குறைய 253 பேர் கொல்லப் பட்டனர்.
இவர்களில் குறைந்தது 40 பேர் வெளிநாட்டவர்கள்.
சுற்றுலாப் பயணிகளையும் சுற்றுலாத் தளங்களையும் இலக் காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படு கிறது.
உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் அச்சத்துக்கு உள்ளாகி யிருக்கிறது.
தற்கொலைத் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடத்திலேயே இலங்கை யிலிருந்த பெரும்பாலான சுற்றுப் பயணிகள் முதல் விமானத்தைப் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியா, இந்தியா மற்றும் இஸ் ரேல் போன்ற நாடுகள், இலங்கைக் குச் செல்லும் தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன.
தேவையில்லாத இலங்கை பயணத்தைத் தவிர்க்குமாறும் அந் நாடுகளின் அரசாங்கங்கள் அறி வுறுத்தியுள்ளன.
நெதர்லாந்து அரசாங்கம் இலங் கையில் உள்ள தங்களுடைய குடி மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் அவசர அவசரமாக வெளி யேற்றி வருகிறது.
கடந்த வாரம் ஐரோப்பிய பயணத்துறை முகவரான டியுஐ, தென்கிழக்கு ஆசியாவுக்கான சுற்றுப் பயணிகளுக்கான பதிவு களை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பு இலங்கையின் சுற்றுலாத் துறை நாட்டின் வளர்ச்சியில் நம் பிக்கை நட்சத்திரமாக விளங் கியது.
அண்மையில் வெளியான 'லோன்லி பிளானட்' வழிகாட்டியில் இலங்கையின் நீலநிற கடற்கரை களும் தேயிலைத் தோட்டங்களும் 2019ஆம் ஆண்டின் சிறந்த இடமாக பெயர் குறிப்பிட்டிருந்தது.
இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுற்றுலாத் துறை இவ்வாண்டு ஐந்து பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டித் தரும் என்று நம்பிக்கையோடு கூறியிருந் தார்.
இது, 2018ஆம் ஆண்டின் 4.4 பில்லியன் டாலருடன் ஒப்பிடு கையில் அதிகம். இலங்கை பொரு ளியலில் சுற்றுலாத்துறையின் பங்கு மட்டும் ஐந்து விழுக்காடு.
இதில் பிரிட்டன், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.6% 740,600ஐத் தொட்டுள் ளது என்று அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்த நிலையில் பயங்கரவாதத் தாக்குதலில் ஆட்டம் கண்டுள்ள சுற்றுலாத் துறையை தூக்கி நிறுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம் தள்ளப் பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை சரிவிலிருந்து மீட்க அமைச்சர் சமரவீர மீட்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சுற்றுலாத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு நம் பிக்கை ஏற்படும் அளவுக்கு அந்த மீட்புத் திட்டங்கள் இருக்க வேண் டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

