இந்தோனீசியாவில் கடும் வெள்ளம்; பத்து பேர் பலி

இந்தோனீசியாவில் கடும் வெள்ளம்; பத்து பேர் பலி

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் கடும் மழை பெய்து வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பத்து பேர் மாண்டனர். பெங்குலு மாகாணத்தில் குறைந்தது ஒன்பது மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள், மேம்பாலங்கள் சேதமடைந்துள்ளன. 12,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.