மகாதீர்: மக்கள்தான் பிரதமரை தீர்மானிக்கின்றனர்

மகாதீர்: மக்கள்தான் பிரதமரை தீர்மானிக்கின்றனர்

1 mins read

பெய்ஜிங்: "பிரதமரை மக்கள்தான் தீர்மானிக்கின்றனர். ஜோகூர் பட்டத்து இளவரசர் அல்ல," என்று பிரதமர் மகாதீர் கூறினார்.

ஜோகூர் காற்பந்து குழுவின் பயிற்றுவிப்பாளர் பெஞ்சமின் மோராவை மாற்றுவதற்குப் பதிலாக பிரதமரை மாற்றுவது நல்லது என்று காணொளி ஒன்றில் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் கூறியிருந்தது குறித்து மகாதீரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மகாதீர், பட்டத்து இளவரசர் மாறலாம், ஆனால் பிரதமரை மக்கள்தான் முடிவு செய்கின்றனர் என்றார்.