பெட்டாலிங் ஜெயா: பெர்லிசில் இந்து சமயத்தை புண்படுத்திய தாக 34 வயது இஸ்லாமிய மத போதகரை போலிசார் கைது செய்துள்ளனர். முஹமட் சம்ரி விநோத் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், சர்ச்சைக்குரிய மதபோதகரான சஹிர் நாயக்கின் உதவியாளர்.
மக்கள் ஒற்றுமைக்கு விரோதமாகச் செயல்பட்டது, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுவதாக போலிசார் கூறினர்.
அவருக்கு எதிராக 13 புகார்கள் வந்ததாக மத்தி செபராங் பிரை மாவட்ட போலிஸ் தலைவர் நிக் ரோஸ் அஷான் நிக் அப்துல் ஹமிட் சொன்னார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 70 வினாடி காணொளி ஒன்றில் அவர் இந்து சமயத்தை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றன.

