குடியேறிகளுக்கு உதவ போப்பாண்டவர் $500,000 நன்கொடை

குடியேறிகளுக்கு உதவ போப்பாண்டவர் $500,000 நன்கொடை

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக மெக்சிக்கோவில் தவியாய்த் தவிக்கும் குடியேறி களுக்கு உதவ போப்பாண்டவர் 500,000 டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களிலிருந்து திரட் டப்பட்ட கத்தோலிக்க தேவாலய பீட்டர்ஸ் பென்ஸ் நிதியிலிருந்து இந்த நன்கொடை வழங்கப்படு வதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் வத்திகன் தெரி வித்தது. குடியேறிகளின் பிரச்சி னையில் முக்கிய நிதியுதவிகள் குறைந்துவிட்டன என்று அறிக்கை சுட்டியது.

அமெரிக்காவுக்குள் நுழை யும் குடியேறிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அதிபர் டிரம்ப் எல்லையில் சுவர் எழுப்ப திட்ட மிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை முன்ன தாக போப்பாண்டவர் குறைகூறி யிருந்தார். மத்திய அமெரிக்காவி லிருந்து மெக்சிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்யும் குடி யேறிகளைத் தடுக்க மெக்சிக் கோவுக்கு அமெரிக்கா அழுத் தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக் காவில் நுழைய முடியாமல் குடியேறிகள் தவித்து வருகின்ற னர்.

இவர்களில் பெரும்பாலோர் தங்கள் நாடுகளில் நடக்கும் வன்முறை, அடக்குமுறை, வறுமை காரணமாக அங்கிருந்து தப்பி அமெரிக் காவில் குடியேற விரும்புவதாகத் தெரிவித்துள் ளனர். கடந்த வாரம் அமெரிக் காவுக்குள் நுழைவதற்காக மெக்சிக்கோவின் சியாபாஸ் வழியாக பயணம் செய்த 400 குடியேறிகளை மெக்சிக்கோ அதிகாரிகள் தடுத்து கைது செய்தனர்.