துப்பாக்கிச் சூட்டில் பெண் மரணம்

சான் ஃபிரான்சிஸ்கோ: கலி போர்னியாவின் சான் டியாகோ நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் காயம் அடைந்தனர் என்று போலிசார் தெரிவித்தனர்.

போவே என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயது ஜான் எர்னஸ்ட் எனும் சந்தேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மர்ம நபரின் நோக்கம் பற்றி தெரியவில்லை. ஆனால் அதி பர் டோனல்ட் டிரம்ப், வெறுப் புணர்வு குற்றச் செயலாக அது  இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்தனர். உடனே நால்வரும் பாலோமர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகவும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் மற்ற மூவரின் உடல்நிலை தேறி வருவதாகவும்  ஷெரிஃப் கோர் தெரிவித்தார்.

காலை 11.00 மணியளவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுடு வதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு வந்த சுற்றுக் காவல் போலிசார் பதிலுக்கு சுட்டதும் சந்தேக நபர் தப்பியோடினார்.

ஆனால் மற்றொரு அதிகாரி, சந்தேக நபரை மடக்கி கைது செய்தார் என்று சான் டியாகோ போலிஸ் தலைவர் டேவிட் நிஸ் லெய்ட் சொன்னார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon