இந்தோனீசியாவின் அண்மை பொதுத்தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ வெற்றியடையும் வாய்ப்புகள் அதிகம் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்குகளில் பாதி எண்ணப்பட்டுள்ளதாகக் கூறிய ஆணையம், திரு விடோடோ 12 விழுக்காடு முன்னிலையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தது.
இதுவரையில் திரு விடோடோ 56.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட திரு பிரபோவோ 50 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் ஆணையம் கூறியது.
முடிவுகள் வெளிவரும்வரை மக்களை அமைதி காக்கும்படி திரு விடோடோ கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் திரு பிரபோவோ, தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துவிட்டதாகக் கூறி வருகிறார்.
மே மாதம் 22 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க வேண்டும்.

