'ராணுவச் சீருடையில் பயங்கரவாதிகள் தாக்கலாம்'

'ராணுவச் சீருடையில் பயங்கரவாதிகள் தாக்கலாம்'

2 mins read

ஈஸ்டர் நாளன்று தற்கொலைத் தாக்குதலை நடத்திய பயங்கர வாதிகள் மீண்டும் பல்வேறு வழி களில் தாக்குதலை நடத்தத் திட்ட மிட்டுள்ளனர் என்று இலங்கை பாதுகாப்புப்படையினர் எச்சரித்துள் ளனர்.

வெடிகுண்டுகள் நிரம்பிய வேனை மோதச்செய்து வெடிக்க வைக்கலாம் அல்லது ராணுவச் சீருடை அணிந்த மனித வெடி குண்டுகள் தற்கொலைத் தாக்கு தலை நடத்தலாம் என்று அவர்கள் கூறினர்.

"இலங்கையில் மற்றொரு தொடர் தாக்குதல்கள் இடம்பெற லாம்," என்று நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கும் பாதுகாப்பு துறை யைச் சேர்ந்தவர்களுக்கும் எழுதி யுள்ள கடிதத்தில் போலிஸ் படை யின் ஓர் அங்கமான அமைச்சர் நிலை பாதுகாப்புப் பிரிவின் தலைவர் எச்சரித்துள்ளார்.

ராணுவச்சீருடையை அணிந்து வேனைப் பயன்படுத்தி தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றக் கூடும், ஞாயிறு அல்லது திங்கட் கிழமைகளில் இந்தத் தாக்குதலை நடத்த ஐந்து இடங்களை பயங்கர வாதிகள் குறி வைத்துள்ளனர் என்று தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இலங்கை பயங் கரவாதத் தாக்குதலில் தொடர் பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் மூன்று வீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டுள் ளது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர இந்தியாவைச் சேர்ந்த 15 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களுக்கும் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குத லுக்கும் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதையடுத்து கேரளாவில் உள்ள மூன்று வீடுகளை 'என்ஐஏ' எனும் தேசிய புலனாய்வு முகவை யின் அதிகாரிகள் சோதனையிட் டனர்.

மூன்று வீடுகளிலிருந்து கைத் தொலைபேசிகள், 'சிம்' அட் டைகள், சர்ச்சைக்குரிய போதகர் சஹிர் நாயக்கின் உரை அடங்கிய டிவிடி, மலையாளம் மற்றும் அரேபிய மொழிகளில் எழுதப்பட்ட குறிப்புகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதி காரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இவர்களின் பங்கு என்ன என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.