இலங்கையில் முகத்தை மறைக்கும் உடைகளுக்குத் தடை

இலங்கையில் முகத்தை மறைக்கும் உடைகளுக்குத் தடை

2 mins read

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் உடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள் ளது.

அண்மையில் தேவாலயங் களிலும் ஹோட்டல்களிலும் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் 250 பேருக்கு மேல் கொல்லப் பட்டதால் இந்தத் தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அவசர சட்டத்தைப் பயன் படுத்தி இந்தக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அதிபர் மைத்ரி பால சிறிசேன நேற்று அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு முக அடையாளங்களை மறைக்கும் எத்தகைய உடையாக இருந்தாலும் அணியத் தடை செய்யப்படுகிறது என்று அவரது அலுவலகம் பின் னர் விளக்கமளித்தது.

ஆனால் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், புர்கா உடைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

இலங்கையில் பல நூற்றாண்டு களாக குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம் மக்கள் வசித்து வரு கின்றனர். நாட்டின் 21 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் பத்து விழுக்காடு முஸ்லிம்கள்.

இவர்களில் சிறிய எண்ணிக் கையிலான பெண்கள் மட்டுமே முகத்தை மறைக்கும் நிகாப் அல்லது புர்கா உடையை அணி வதாகத் தெரிகிறது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த எட்டு நாட்களாக முழு விழிப்பு நிலையில் இலங்கை இருந்து வருகிறது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ஏராள மான சந்தேக நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

இன்னும் பலருக்கு வலை வீசப் பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் உள்ள தேவாலயங் களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கடந்த வார ஞாயிற்றுக் கிழமை தேவாலயப் பிரார்த்தனை கள் ரத்து செய்யப்பட்டன.

இருந்தாலும் தாக்குதலுக்கு உள்ளான செயின்ட் அந்தோணி யார் தேவாலயத்துக்கு வெளியே கூட்டுப் பிரார்த்தனை நடை பெற்றது. இதற்கிடையே பயங்கர வாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள் ளது.

குண்டுவெடிப்பு தொடர்பில் 100க்கும் மேற்பட்டோர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.