வாக்கு எண்ணிக்கையில் ஜோக்கோ விடோடோ முன்னிலை

வாக்கு எண்ணிக்கையில் ஜோக்கோ விடோடோ முன்னிலை

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோக்கோவி என்று அழைக்கப்படும் ஜோக்கோ 56.2 விழுக்காடு வாக்குகளும் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியாண்டோ 43.8 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு மே 22ஆம் தேதி வரை ஆகலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரே அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் திரு ஜோக்கோ வெற்றி பெற்றால் அவர் இரண்டாம் முறையாக அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு அமைச்சரவையை மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.