சிட்னி: கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் தவிக்க நேர்ந்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட் சோதனை இயந்திர கட்டமைப்பு வேலை செய்யாததால் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவிப்பு
1 mins read

