நஜிப்பின் மனுவை நிராகரித்தது மலேசிய உயர் நீதிமன்றம்

நஜிப்பின் மனுவை நிராகரித்தது மலேசிய உயர் நீதிமன்றம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தன் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லாத காரணத்தால் அவற்றை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. திரு நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதி முகம்மது நஸ்லான் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திரு நஜிப் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லாத காரணத்தாலும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும் ஒரே சமயத்தில் விசாரணை செய்ய முடியாது என்பதாலும் ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நஜிப்பின் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் வாதிட்டனர்.